இணையுங்கள் எங்களின் அரசு வேலைவாய்ப்பு குழுவில்
NABFINS CSO Recruitment 2025
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி
NABFINS CSO Recruitment 2025 NABFINS என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான (NABARD) வங்கியின் துணை நிறுவனம் ஆகும். இது சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) மூலம் சமூக உறவுகளை வலுப்படுத்தி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் நிதிச் சேவை நிறுவனம் ஆகும். NABFINS நிறுவனத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சிறு அளவில் தொழில் தொடங்க விரும்பும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதாகும்.

Customer Service Officer (CSO)
தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனமான NABFINS தற்போது Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பணியிடங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு, நிறுவனத்தின் நிதிச் சேவைகளை விளக்கி, தேவையான உதவிகளை வழங்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

கல்வித் தகுதி
NABFINS CSO Recruitment 2025 இந்தப் பணிக்கான தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியின்போது முன் அனுபவம் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவராகவும், அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்கவும் வேண்டும். இந்த பணிக்கான மாத சம்பளம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
10th, 12th, டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NABFINS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nabfins.org/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2025 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |






